பயிற்சி வகுப்புகள்

பயிற்சி வகுப்புகள்
பாடத்திட்டம்- தமிழ் எழுத்துக்களின் ஒலி வடிவம்
- தமிழ் எழுத்துக்களின் வரி வடிவம்
- ஓர் எழுத்துச் சொற்கள்
- ஈரெழுத்துச் சொற்கள்
- மூவெழுத்துச் சொற்கள்.
- நான்கு எழுத்துச் சொற்கள்.
- பெயர்சொற்கள் ,மறு பெயர்ச்சொற்கள்.
- வினைச் சொற்கள்.
- வினைச்சொற்களைக் காலத்திற்கேற்ப மாற்றுதல்.
- குறுஞ்சொற்றொடர்கள் உருவாக்கல்.
- முழுசொற்றொடரை அமைத்தல்.
- தமிழ் சொல்லிற்கு ஆங்கில அர்த்தம் காணுதல்.
- புதிய சொற்களை இணையவழி அறிதல்.
- புதிய சொற்களுக்குச் சொற்றொடர் அமைத்தல்.
- செய்திதாள்களில் தலைப்பை எழுத்துக் கூட்டிப் படித்தல்.
இத் ‘தமிழ் விழிப்புணர்வு வகுப்பு’ பயன் பெறுவோரின் பட்டியல்
பயன்பெறுவோர்- நீங்கள் புலம் பெயர்ந்த தமிழரா, உங்கள் குழந்தைகளுக்கு அடிப்படை தமிழை குறுகிய நேரத்திற்குள் கற்க.
- தமிழ் பேசுவேன் ஆனால் எழுதிப் படிக்கத் தெரியாது.
- தமிழ் பேசுவேன், படிக்க ஆர்வம், யாரிடம் சென்று கற்றுக் கொள்வது.
- அதற்கு நீண்ட காலமாகும் என்று எண்ணித் தமிழை விட்டு விட்டேன்.
- தமிழ்ப் படிப்பேன், என் சிந்தனைகளை எழுத ஆசை, ஆனால் எழுத்துப்பிழை வரும் என்றென்னி தமிழை விட்டு விட்டேன் என்ற வருத்தம்.
- எங்கள் பிள்ளைகள் பிற பாடங்களை நன்கு படிக்கின்றனர், தமிழ் மொழிதான் படிக்க கடினப்படுகின்றனர்.
- நீங்கள் அல்லது உங்கள் தோழர்கள் வேற்று மாநிலதிலிருந்து வந்தவர்களின் பிள்ளைகள் இரண்டாம் மொழி தமிழ் எடுத்துவிட்டு சிரமப்படுபவர்கள்.
- பேரன் பேத்திகளுக்கு 10மணி நேரத்தில் அடிப்படை தமிழைக் கற்க.
- நீங்கள் பள்ளி நிர்வாகியா, உங்கள் மாணவர்கள் சிலர் தமிழ் கற்றுக் கொடுத்தாலும் தமிழ் கற்றுக்கொள்ள இயலாதவர்களுக்கு.
- பள்ளிப் பருவத்தில் தமிழ் எழுதினேன், தற்பொது அலுவலகப் பணியில் தமிழ் எழுதிப் படிக்க வேண்டிய நிலை சிரமப்படுகின்றேன்.
- நீங்கள் வேற்று மாநிலத்தில் இருப்பதால் உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்க இயலவில்லையா.