ஒலியைக் கேட்கவும்
தமிழ் அறிவூட்டல் தளம்
நம் தாய்மொழியாம் தமிழை, பிறமொழி தாக்கத்தின் காரணமாக தமிழ் மொழியை எழுதப் படிக்க இயலாமல் துன்பப் படுகின்றர், இக்கால (2000-2020) இளைய சமுதாயரிடையே தமிழை உயிர்ப்பிக்க வேண்டும், அதற்காக இத்தளம் கணினியில் குறுகிய காலத்தில் கற்க, கற்றல் கற்பித்தல் வழியை அறிமுகம் செய்கின்றது.
இக்கால (2000-2020)தமிழ் மொழியின் நிலை:
மொழியில் இரு வடிவங்கள் உள்ளன, ஒன்று ஒலிவடிவம் மற்றொண்டு வரிவடிவம். நாம் பேசுவது ஒலிவடிவம், எழுதுவது வரிவடிவம்.
தமிழ் மொழி தற்போது (2000-2020) ஆண்டுகளில், பிறமொழி தாக்கத்தினால், தமிழரிடையே தாய் மொழியாம் தமிழ் மொழியின் மேல் ஆர்வம் குறைந்தனால், இளைஞர்களிடையே தமிழ் படித்தல்,எழுதுதல் என்பது தமிழ் வரிவடிவ முறையை விடுத்தது, ஆங்கில வரிவடிவத்தில் எழுதிக் கொண்டு தங்கள் எண்ணங்களை(இணையதளம், முகநூல்,…குறுந்தகவல்கள்..…… ) பரிமாறுகிறார்கள், இதனால், ஆங்கில மொழிக்கும், தமிழ்மொழிக்கும் தவறு இழைக்கின்றோம் என்ற உணர்வே அவர்களிடம் இல்லை.
தமிழ் மொழி குழந்தைகளிடம்(8 வது முதல்- 15வயது வரை) பேச்சு வழக்கே உள்ளது, தமிழ் பாடப் புத்தகத்தை மதிப்பெண் என்பதற்காகவே படிக்கிறார்கள். தமிழ்ச் செய்திதாள் படித்தல், தமிழ்ப் புத்தகம் படிக்கும் வழக்கம் குறைந்துக் கொண்டே வருகின்றது. அவர்களிடம் தமிழ் மொழிப் படிப்பதும், எழுதுவதும் கடினமாக உள்ளது என கருதுகிறார்கள்.
அகவை இடைவெளி:
70க்கு- 55க்கு- 30க்கு-10க்கு.
அகவை 55லிருந்து-70க்கு- தன் பேரன் பேத்திக்கு தமிழே தெரியவில்லை என்றக் கவலை
அகவை 30லிருந்து-55க்கு- ஆங்கிலத்தை கற்றால் தான் தன் மகனோ,மகளோ உயர்நிலை அடைவார்கள் என்ற எண்ணம்.
அகவை 16லிருந்து-30க்கு - தான் நினைப்பதை ஆங்கிலம் கலந்த தமிழோ, தமிழ் கலந்த ஆங்கிலமோ மொழிக்கு முக்கியமிலை,நினைத்த செய்தி சென்று சேர்ந்து விட்டது.
16லிருந்து- 5க்கு ஆங்கிலமே ஓங்கி உள்ளதால், தாத்தா பாட்டியிடமும் ஆங்கிலமே பேசுகின்றனர்.
எனவே, தமிழ் நாட்டில் உள்ள நகர்ப்புறத் தமிழர் குடும்புங்களே இந்நிலை என்றால்,
வேலைக்காக புலம் பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளிடையே தமிழின் நிலை கேள்விக் குறியாகவே உள்ளது.
இந்நிலை நீடித்தால் குறுகியகாலத்தில் தமிழ் வரி வடிவம் அழியும் நிலை உருவாகும், ‘தமிழ் மொழியை அழித்தவன், தமிழன்’ என்ற பழிச்சொல்லே மிஞ்சும்.